ஆதாரம் நீதானையா என்துரையே


244. சகானா        ஆதி தாளம்     (195)

பல்லவி

                        ஆதாரம் நீதானையா என்துரையே
                        ஆதாரம் நீதானையா

அனுபல்லவி

            சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்      

சரணங்கள்

1.         மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்குப் பற்றேதையா
            எளியன்மேல் மற்றோர்க்குப் பற்றேதையா - எளியனுக்கு

2.         நான்தானெனும் பல நரர் துணை தழுவ நட்டாற்றில் விட்டாரையா
            தனியனை நட்டாற்றில் விட்டாரையா - தனியனுக்கு

3.         கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே வற்றாக்கிருபை நதியே
            என்பதியே வற்றாக் கிருபை நதியே - என் மதியே

4.         சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து துக்கமிகு வேளையில்
            என் சுகிர்தமே துக்கமிகு வேளையில் - உன் தாசனுக்கு

5.         சஞ்சலச் சடலம் வஞ்சகப்படலம் பஞ்சாமிர்தக்கடலே
            என்னுடலுக்காதாரம் நீதானையா - நின் தாசனுக்கு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு