தசம பாகங்களை நமக்குத் தா தா தா தா தா


205. இராகம் (ஏசுநாதனைத் துதிசெய்)

பல்லவி

                   தசம பாகங்களை நமக்குத் தா தா தா தா தா

1.         அசதியும் தளர்ச்சியும் வேண்டாமதிலே
            அனைத்தையும் தந்த கடவுளார் நாமே
            நிசமுனை யாசீர்வதிப்போம் பக்தா
            நீ நீ நீ, நீ நீ                                                     - தசம

2.         ஆத்தும சரீரசுக மெதினாலே
            ஆயுள் மக்கள் சுகமெதினாலே
            தோத்திரக்காணிக்கை நமக்கேதுமிலையோ
            சொல் சொல் சொல், சொல் சொல்                      - தசம

3.         மனிதரை வஞ்சிக்கும் வண்ணம் நமையும்
            வஞ்சிக்கப்போமோ வேண்டா மறிவாய்
            தினமுதல் விளைவாய் நமது கடமை
            செய் செய் செய், செய் செய்                                 - தசம

4.         வானமும் புவியும் மாரியும் எனதுன்
            வாழ்வுக்குத் தக்க காணிக்கையுடனே
            நீர் நமதாலயமதனுள் வந்தீர்
            நில் நில் நில், நில் நில்                                     - தசம

5.         பிள்ளைகளாரால் பிழைத்தது பெற்றோம்
            பிழைத்தனர் யாரால் விபத்துகளின்றி
            எள்ளளவுமிதை நினையா திருப்பது
            ஏன் ஏன் ஏன், ஏன் ஏன்                                      - தசம

6.         ஆக நம் வீட்டில் தசம பாகம்
            ஆகாரமாக சேர்த்து வைப்பாக
            வாகுடனுந்தன் மனதுடன்கொண்டு
            வா வா வா, வா வா                                           - தசம

7.         அப்போ வானபலகணி திறந்து
            அளவில் லாசீர் வாதங்கள் பொழிவோம்
            செப்பாய் நமக்குத் தோத்திரம் சொல்லி
            தின் தின் தின், தின் தின்                     - தசம

8.         வருஷிக்க மாட்டேனோ ஆசீர்வாதம்
            பட்டளவில்லா வகையாயுனக்கு
            பரீட்சித்தென்னை சோதித்தறிந்து
            பார் பார் பார், பார் பார்                            - தசம

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு