அன்னமே நீ தூது போயேன்


260. இராகம் (நேசமே எழுந்து ஏசுராஜனை)      (217)

பல்லவி

                   அன்னமே நீ தூது போயேன் மன்னனை அழைத்து வாவேன்

அனுபல்லவி

                   கன்னல் மொழி சீயோனெனின் காதலையவர்க்குச் சொல்லி

1.         வர்ணமணி மார்பழகன் வானவர் பணியும் இச்சை
            இன்னமேதா வரக்காணோம் இக்ஷணமென்மேல் தயவாய்

2.         பத்தினி எனைக்கெடுக்க பதிலிருக்குதே இச்சை
            பாதகப்பசா சகல பங்கம் வந்தணுகிடாமல்

3.         நித்ய வாசஸ்தலமொன்று எத்தனம் செய்து திரும்ப
            இத்தரை வருவேனென்றார் இன்னம் வரக்காணேனடி

4.         இத்தனையும் கேட்டாலவர் இக்ஷணமே வந்திடுவார்
            சத்தியம் சத்தியம் ஞான சிகாமணியும் சொல்லுகிறேன் - அன்னமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு