தெய்வமே நீர் என் தெய்வமே
300. ஆனந்தபைரவி ரூபக
தாளம் (279)
பல்லவி
தெய்வமே
நீர் என் தெய்வமே - தெய்வமே
நான்
அதிகாலையில் தேடி நிற்கிறேனே உம்மை
1. வற்றியே தண்ணீர் அற்றதாய் - அற்றதாய்
வறண்ட இந்த ஆரணிய பூமியிலே
2. உம்மிலே தாகம் கும்முதே - கும்முதே
என் ஆத்துமம் கூறும் உம்மில் வாஞ்சை கொண்டு
3. உம்முடைய மகிமை வல்லமை - கண்முன்
உமதாதுவத்தில் காணத்தேட்டமெனக்கதிகம்
4. தெய்வமே நீரென் தெய்வமே - தெய்வமே
இங்குமது கிருபை ஜீவனிலும் நவம் நவமே
5. தோத்திரம் உமக்குச் செய்திடும் - செய்திடுமே
என் உதடுஜீவனுள்ள நாளெல்லாம்
6. உம்முடைய நாமம் சொல்லியே - செம்மை
என் கையைக் குவித்து சேவித்து ஸ்தோத்தரிப்பேன்
Comments
Post a Comment