பாவப்பிணி அகல ஜீவமருந்தீயுமேன்
294. பிலஹரி செம்படைதாளம் (273)
இராகம்
(இந்தக் குழந்தையை நீர்)
பல்லவி
பாவப்பிணி
அகல ஜீவமருந்தீயுமேன்
அனுபல்லவி
சாவின் கூரை ஒடித்த ஜீவநாதா
பர்த்தாவே!
1. அன்னை வயிற்றிலே உற்றிந்நாள் வரையிலும் நான்
தின்மை தனக்கல்லால் வேறென்ன நன்மைக்காளானேன்
2. ஜென்ம பாவத்தினோடு கன்ம பாவமும் கூடி
நின்னை அடையாப்படிக் கென்னை அகற்றினவே
3. ஞானவரங்கள் முதலான நன்மைகளைத்தீ
தானவைகள் என்றெண்ணி, யானை அழிவுறாமல்
4. ஐயா, நின் மார்பில் உற்ற துய்யன் யோவான்தனைப்
போல்
மெய்யால் நின் நேசத்தை யான் உய்யும் விதம்
அடைய
Comments
Post a Comment