நேசமணி வாசமணி ஈசனென்னும்


264. செஞ்சுருட்டி           ஆதி தாளம் (221)

பல்லவி

                   நேசமணி வாசமணி ஈசனென்னும் ஏசுமாமணி

அனுபல்லவி

                        பாசமாக இவ்வுலகில் நேசமாய் தற்காத்துவரும்

1.         எங்கே ஓடிப்போனாயப்பா ஏழைமனம் கலங்குதப்பா
            தாழ அன்றி மீள ஒருநாளும் என்னால் கூடாது

2.         இஷ்டனென்ற ஏசையனே பவக்குஷ்டமறக்கார் மெய்யனே
            பக்தனே கர்த்தனே நித்தனே நிச்சயமாய்

3.         சூட்சமான மீட்சிபெற காட்சி கொடு மாட்சிபெற
            மீட்டு ரட்சித்த பத்தா கூட்டுறவான சித்தா

4.         வாருமையா காருமையா பொற்கரத்தில் சேருமையா
            நாதா பொற்பாதா நின்பாதம் பணிவேனேசு

5.         அஞ்சாத கல் நெஞ்சுருக அஞ்சல் செய்யும் மனம் நொறுங்க
            அன்பனே நண்பனே இன்பனே செம்பொன்னே

6.         நின்னையல்லால் எங்கேபோவேன் நீசனான பாவியானேன்
            உன்னையல்லால் இந்நிலத்தில் என்னை ஆதரிப்பாரில்லை

7.         என் ஜெபங்கேள் என் பாவந்தீர் என்னாசை தீர உன்னாசிகூர்
            மன்னவனே பொன்னகரை உண்மையாகச் சொன்னவனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு