பாவப்பிணி தீர்க்கும் பண்டிதனான
245. செஞ்சுருட்டி ஆதி
தாளம் (197)
பல்லவி
பாவப்பிணி
தீர்க்கும் பண்டிதனான
பரன்
சுதனின் மருந்து
அனுபல்லவி
தேவ திருத்துவ வார்த்தை மருந்து
தீர்க்கர் முனிவருரைத்த மருந்து
1. வார்த்தையதாகவே வானத்திருந்த மகத்துவ தற்பரனார்
ஒரு
வார்த்தையினாலே கடலின் உக்கிரம் வாய்மூடி
நின்றதுவோம் - ஒரு
வார்த்தை சொல்லச் சொல்லி செஞ்சின சேர்வையில்
மனுவில் ஒன்றதுவாம்
வார்த்தையினாலே அநேக நோயர் கலி தீர்த்தவராம்
கதி சேர்த்தவாரம் - எனின்
2. பெத்தலேகேமெனும் தாவீதின் ஊர் மாட்டுக் கொட்டிலில்
உற்றவராம் - அந்த
பேர் பெற்ற திருக்கலிலே நகர் நாசரேத் ஊர்
தனில் வாழ்ந்தவராம் - மகிழ்
உற்ற எருசலே மீதினிற் பாடுபட்டுயிர் விடுத்தவராம்
எத்திசையோர்களும் முக்திதனைப்பெற வெற்றிக்கொடி
கொண்டுயிர்த்தவராம் - எனில்
3. கள்ளத்தனம் செய்த பெரும்பாடுள்ள பெண் கவலை
தீர்த்ததுண்டு - மிக
கலங்கி அழுத நாயின் விதவையின் கண்ணீர்
துடைத்த துண்டு - புவி
உள்ளே அடங்குண்டு மரித்த லாசருக்குயிர்
அளித்ததுண்டு
வள்ளலே உந்தனை வேண்டிடும் பேர்களுக்கன்புடனே
வரந்தரவாக்கொன்றுண்டு - எனின்
4. கொடிய குருசில் அறையுண்டிருந்த குருவே உன்னை
அல்லால் - எந்தன்
குற்றம் பொறுத்தென்னை ரட்சிக்க வேறாரால்
கூடுமோ நின்னையல்லால்
வடிய குருதி சிலுவையில் சொன்ன முதன்மையான
சொல்லால்
அடியர்க்கு ஞான ஆகாரம் ஈந்திடும் அற்புதனெ
கடைக் கண்ணால் பார்த்திடும் - எனின்
Comments
Post a Comment