துரை மகராஜனே ஜேசே
297. பியாகு ஆதி தாளம் (276)
பல்லவி
துரை
மகராஜனே ஜேசே
துரை
மகராஜனே சுவாமி
அனுபல்லவி
தூரஸ்தலம் போனதாலே மாறிப்போயிற்றோ உன்
அன்பெங்கே
1. என் கணவனே குணாளா இன்பமே ரஞ்சித மணாளா
பைங்கிளி என்றன் குணாளாசுகந்த போளகந்தபோளம்
2. தத்தம் அதைத் தந்தாயே இத்தரையிலே வந்தாயே
ரத்தம் சிந்தித் தெத்தெடுத்து சுத்தம்பண்ணி
முக்தி தந்தவா
3. செங்கோலும் திருமுடியும் தங்கச் சிலுவைக்கொடியும்
துங்கா உனில் தேவாலங்கிர்தமும் கண்டு அங்கு
வாழுவேன்
4. இந்தோ ஜல்தி வாறேனென்றாய் இந்தளவெங்கிருந்து
கொண்டாய்
சிந்தையுங்கலங்குதே, தியங்குதே மயங்குதே
என்
5. விண்ணான ஜோதியிலே கண்ணாடி வீதியிலே
என் ஆவல் தீரப்பாடி உன்முன் ஆடி நின்னை
நாடுவேன்
6. பொல்லாத லோகத்திலே நில்லேனிவ்வயதிலே
எல்லாமறிந்த மானே, தொல்லை தீரும் தொல்லைதீரையா
7. பரதேசி ரத்னம் பாவே பரனே சாரோன் லீலிப்பூவே
அரதேசிக்குள்பரிசமீந்து கருணைகூர்ந்த திருமணஞ்செய்ய
Comments
Post a Comment