நேசமே எழுந்து ஏசுராஜனை
259. இராகம் (அன்னமே நீ தூது)
(215)
பல்லவி
நேசமே
எழுந்து ஏசுராஜனை அழைத்து வாவேன்
அனுபல்லவி
பாசத்தால்
பரிசம்போட்ட ஆசைமணவாள நேசா
1. மாய உலகத்தில் நின்று வாடுகிறேன் என்று சொல்லு
பேயும் கெட்ட நெஞ்சும் எனை ஏய்க்குதே அதையும்
சொல்லு
2. தட்டித் தட்டி எழுப்பியும் பட்டமரம் போலிருந்தேன்
மட்டில்லாத ஞான மணவாளரைப் பொறுக்கச் சொல்லு
3. சீக்கிரம் வருவேனென்ற வாக்கு நெடுங்காலமாச்சே
சீயோனாம் மனைவி சற்றே தூங்குகிறாளென்று
சொல்லு
4. பொன்முடி அரசர் தந்த அங்கியிற் கறை பிடித்து
சென்னிறமா முற்றைத்தேடி ஓடுகிறாள் என்று
சொல்லு
5. வர்ணமணி ராஜர் தந்த பொன்னாரங்களிற் சிலதை
அண்டர்கோன் முகத்தைப் பார்க்க ஆசிக்கிறாள்
என்று சொல்லு
6. ஒண்டியாய்ப் புலம்பும் பரமண்டலப் பிதாமகனாம்
அண்டர்கோன் முகத்தைப் பார்க்க ஆசிக்கிறாள்
என்று சொல்லு
7. ஆறுதலுமில்லை சாத்தான் சீறுதலதிகமம்மா
தேறுதல் செய்யுமாவியைத் தாரும் தாரும்
என்று கேளு
8. சத்துருக்கள் மூன்றுபேரால் மெத்தவும் கலக்கமம்மா
உத்தம சமாதானத்தை தாரும் தாரும் என்று
கேளு
9. ஆவியில் குளிரதிகம் பாவத்தில் வெறுப்புமில்லை
தாவித்தாவிக் கொஞ்சமனல் தாரும் தாரும்
என்று கேளு
10. சிந்தை எல்லாம் சீயோன் மேலே விந்தை மனுவேலருக்கு
ஐந்து காயம் காட்டி நின்று தேடுகிறார்
என்று சொல்லு
Comments
Post a Comment