போவோம் பரநகர்க்கு ஜல்தி, புறப்படுங்கள்


222.                     (165)

பல்லவி

                   போவோம் பரநகர்க்கு ஜல்தி, புறப்படுங்கள்

அனுபல்லவி

                        போவோம் புகழ்ச்சியுடன்
                        போவோம் மகிழ்ச்சியுடன்

1.         வச்சிரமான நல்ல வண்டி - வாணாள் குறுகி
            அச்சு முறியும் சகசண்டி - வாவென்றிழுத்தால்
            நச்சென்று போட்டுட்காரும் வண்டி - இதை அடுத்து
            ரட்சிப்படைய மாட்டாய் ஒண்டி - இதை அறிந்து
            இன்றே மனம் திரும்பி மின் சாரதி எழும்பி - போவோம்

2.         இங்கே நாலைந்து மெத்தை வீடு - நாளை இறந்தால்
            எங்கேயிருக்கும் இந்தக்கூடு - கிடைக்கும் பலன்
            அங்கும் தனிமை இடுகாடு - நான் சொன்னேன் சொன்னேன்
            மறந்தால் நஷ்டமது உன்பாடு - இதையறிந்து
            இன்றே மனம் திரும்பி மின்சாரதி எழும்பி         - போவோம்

3.         மாயாபுரியுடனே கூட்டு - உறவு வேண்டாம்
            மாயானின் பாணங்களைத்தீட்டு - தூளாய் நொறுக்கி
            யாவும் காற்றின் தூசியிலோட்டு - வேதம் படித்து
            தூய சுத்தாவியனல் மூட்டு - மூட்டி பக்தியாய்
            இன்றே மனந்திரும்பி மின்சாரதி எழும்பி          - போவோம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு