கண்ணையா கண்ணையா
298. இராகம் கரகரப்பிரிய ஆதி தாளம் (277)
பல்லவி
கண்ணையா
கண்ணையா உறவாலே தானே
மனம்
சோர்ந்தோன் கனிந்தொரு முத்தி தா
1. கனவோ ராஜையா கண்டேன் கண்டேன் மேசையா
கங்குல் பகலுந்தனின் காதல் கொண்டேன் மேசையா
கண் மயக்கம் காட்டினையே என் உள்ளத்தின்
ஏக்கம் பொய்யே
2. எனக்கோர் வாக்குரை எழுதிக்கொடுத்தவா
எஜமான் நீ எனக்கிருக்கும் போதென்னகுறை
இப்படி எப்படிப் புகழ் செப்பென்னாதென்
ஆயுள்வரை
3. நடனமாயாடுவார் ரஞ்சிதமாய் பாடுவார்
நயந்தே கூடுவார் ஞானப்பூ சூடுவார்
நன்றியுடன் நானதைத் தின்று ருசி கொண்டாடுவேன்
Comments
Post a Comment