எப்போதும் இன்ப வாழ்வே


262. இராகம் இங்கிலீஷ்          (219)

பல்லவி

                   எப்போதும் இன்ப வாழ்வே
                   ஏசையா என்னோடிருப்பதாலே

1.         எப்பொருளும் குப்பை போன்றனவே - மாந்தர்
            எவ்வரும் ஓர் நாளில் தூசிதானே
            என்னருமை நேசர் ஏசு நாதர்
            எனக்கெல்லாம் அவர் பின்னே ஏது குறை

2.         மாதா பிதா உற்றார் மாண்டிட்டாலும் - பின்னும்
            மற்றுள்ள இஷ்டர் மறைந்திட்டாலும்
            மன்னன் கிறிஸ்தேசு மங்கா நேசர்
            எனக்கென்ன குறை எனக்கேது பீடை

3.         காவற்காரர் ஏசு கண்ணுறங்கார் என்மேல்
            ஆவல் மிகுந்தோர் அன்பு மிகுந்தோர்
            பட்டயத்தால் பக்கத்தாயிரம் சாயினும்
            பயந்திடேன் சற்றுமயர்ந்திடேன்

4.         தங்குமிடம் பூமி சத்திரமே - விண்ணின்
            தங்கவீட்டின் வாழ்வு நித்தியமே
            மங்கா வாழ்வு எனக்கங்கேயுண்டு பின்னே
            இங்கே எதை எந்தன் பங்கென்னுவேன்

5.         எத்தனையாய் மாந்தர் தூசித்தாலும் - பின்னும்
            இகழ்ந்தென் பேரைக் கெடுத்திட்டாலும்
            ஏதும் சொல்லேன் நாவெழும்பவிடேன்
            கிறிஸ்தேசையர் போலவர்க்கிரங்கிடுவேன்

6.         என்ன நஷ்டம் தொல்லை துன்பம்வந்தும் - சாத்தான்
            ஏக படையாய் எனைச்சூழ்ந்தாலும்
            என்ன பயம் அதால் ஏதபாயம்
            எனக்கேசு துணை சேனா வீரரவர்

7.         சஞ்சலப்படுத்தும் நோய்ப்பிடித்தும் - பின்னும்
            சாவின் மந்தாரம் எனைக்கவிந்தும்
            கொஞ்சப்பாடு எந்தன் அஞ்சல் முடிவாகும்
            செஞ்சுடரைக் கண்ணால் கண்டிடுவேன்

8.         ஆதரவானோர் அருமையானோர் - இந்தப்
            பூதலம் விட்டோடிப் போனாலுமே
            ஆதரவாய் ஏசை அண்டிச்சேர
            ஆவலாகுமதால் எனக்கப்போதுமே

9.         நிற்பேன் என்நேசர் கரம் பிடிப்பேன் - சாத்தான்
            நிற்காதோட மறைவாள் பிடிப்பேன்
            விற்பிடிப்பேன் ஜெயவெற்றி கொள்வேன்
            சேனாவீரர் பலத்தாலே தீரனாவேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு