எருசாலேம் குமாரியப்பெண்ணே


239. சங்கராபரணம்       ஆதி தாளம்        (191)

பல்லவி

                   எருசாலேம் குமாரியப்பெண்ணே
                   ஏசு சுவாமியை தேடிவா கண்ணே

அனுபல்லவி

                        வாலிபப்பிராயத்தில் சுவாமியுன தண்டை
                        வந்து தமதுடநந்தவனந்தனில்
                        காலையிலுந்தனை கூலி பொருந்தியும்
                        கண்மூடிக்கொண்டு பின்னை ஏன் பார்க்கிறாய்  - எருசாலேம்

1.         நந்தவனம் மெத்தத்தூரம் - என்று
            நாணி நில்லாதே இந்நேரம் - சாலமன்
            கந்தவர்க்கப்பரிமளம் - மனக்
            காட்சிக்குரிய சிங்காரம்

                        சந்ததம் காதுக்கினிதாகவே கேட்க வெண்
                        சாமரைக்குஞ்ச விருஷங்கள் வீசுது
                        பந்தங்கள் போலதன் பக்கத்தில் தோன்று து
                        பார்க்கப் பார்க்கப் பளிங்காகவே மின்னுது          -எருசாலேம்

2.         சென்னல் சிங்காதிபன் தோட்டம் - அங்கே
            ஜீவநதிப்பெருக்கோட்டம் - நல்ல
            கன்னிப்பூங்கோதையராட்டம் - உனை
            காணவருவர் கூட்டம்
                       
                        நன்னயமாயுன தன்ன நடைகளை
                        மன்னவன் கண்டு வழிபார்த்து நிற்கிறார்
                        சன்னைபோட்டுக்கொண்டு பின்னே ஏன் பார்க்கிறாய்
                        தந்தப்பல்லாக்கதோ உந்தன் முன் தோணுது     - எருசாலேம்

3.         தேவியர் சாலையில் கூடு - அதோ
            செழுமலர்க்காவின் மேடு - தலை
            சீவியே கூந்தலைப்போடு - ரோஜா
            செண்பக முல்லைப்பூச்சூடு

                        கோடிச் சித்திர ஆடை நெய்துடுத்து மணக்
                        கோலத்துக்கேற்ற நல்லாளா சிறப்புடன்
                        கூடிக்கூடிப் பதம பாடிப்பாடிக் குதித்
                        தாடியாடிக்கிட்ட நாடியோடி வாடி                    - எருசாலேம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு