ஏசையா நாங்களிப்போ


276.               (233)

பல்லவி

                   ஏசையா நாங்களிப்போ இன்பமாக இங்குகூடி
                   ஏற்றிப் போற்றித் தொழுதிடவந்தோமே

அனுபல்லவி

                      ஆசையாயும் தாசர்களை ஆசீர்வதிக்கவாருமையா ராஜா
                        ஆசீர்வதிக்க வாருமையா

1.         கேட்டால் கொடுப்பேனென்று கிருபையாய் வாக்களித்த
            கிறிஸ்துவே உம்மை நாங்கள் கெஞ்சுகிறோம்
            தேடினால் கண்டடைவீரென்று
            திருவாக்களித்த ராஜனே ராஜா திருவாக்களித்த ராஜனே

2.         தட்டினால் திறப்பேனென்று தயவாக வாக்களித்த
            தயாபரா உம்மை நாங்கள் கெஞ்சுகிறோம்
            தாசர் கேட்கும் மன்றாட்டை
            தயவுடன் ஏற்றுக்கொள்ளுமையா ராஜா தயவுடன் ஏற்றுக்கொள்ளுமையா

3.         ஒரு மனதுடன் ஓர் இடத்தில் கூடினதால்
            அருமையாய் ஆசீர்வதித்திடுமேன்
            ஒரு மனதுடன் உம்மை கூடித் துதிக்க
            உண்மை ஆவி தாருமையா, ராஜா உண்மை ஆவியைத் தாருமையா


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு