சந்ததம் சந்ததம் வாருமையா எங்கள்
220. ரியாகு ஏக தாளம் (163)
1. சந்ததம் சந்ததம்
வாருமையா எங்கள்
சங்கடம்
யாவையும் தீருமையா
தீருமையா தீருமையா தீயனென் பாவத்தைத் தீருமையா
2. வானமன்னாவதைப் பெய்யுமையா
வண்டருக்கு கிருபை செய்யுமையா
செய்யுமையா செய்யுமையா ஜென்மபாவங்களைக்
களையுமையா
3. கர்த்தர் என் பொக்கிஷம் பொக்கிஷமே
கன்மி என் பொக்கிஷம் பொக்கிஷமே
பொக்கிஷமே பொக்கிஷமே பொந்தகிருபை என் பொக்கிஷமே
4. ஏழைப்பங்காளனே தாரகம் நீ ஏழைக் கைம்பெண்களின்
தாரகம் நீ
தாரகம் நீ தாரகம் நீ தாரகம் வேறில்லை தற்பரனே
5. தந்தையும் தாயும் நீ வந்தருளேன்
சங்கடம் யாவையும் கண்டருளேன்
கண்டருளேன் கண்டருளேன் கண்டனம் பண்டனம்
கொண்டருளேன்
Comments
Post a Comment