போதாது நீ போதுமென்று
265. செஞ்சுருட்டி ஆதி தாளம் (222)
பல்லவி
போதாது
நீ போதுமென்று எண்ணுவது போதாது
1. காலையிலும் மாலையிலும் வேலையில்லா வேளையிலும்
ஆலயவாராதனைக்குப் போகிறது மாத்திரமே - போதாது
2. சத்திய வேதாகமத்தை பத்திரமாய் வைத்து வைத்து
மற்றவர்கள் கேட்கவதை வாசிப்பது மாத்திரமே - போதாது
3. தற்பரனை நோக்கியொரு ஐக்கிய ஜெபம் செய்கையில்
சொற்களை எடுத்தடுக்கி ஜெபிப்பது மாத்திரமே - போதாது
4. அச்சயன் தனது நாளை ஆசரிக்கச் சொன்னதினால்
அச்சமொடு பக்தியாக ஆசரித்தல் மாத்திரமே
- போதாது
5. ரத்தம் சிந்திப் பாடுபட்டு முக்தி சம்பாதித்த
நம
தத்தன்அருள் நற்கருணைசேருவது மாத்திரமே
- போதாது
6. ஞானபரனான ஏசுநாதனுக்குப் பிரீதியாக
வெணவிதம் செய்துவரும் தானதர்மம் மாத்திரமே - போதாது
7. பண்ணின பவங்களுக்காய் பலபல வேளைகளில்
அன்னபானமின்றி தபசிருப்பது மாத்திரமே - போதாது
8. எங்கும் நிறை வியாபகற்கு ஏற்ற சங்கக்காணிக்கையை
தங்களைக் கேட்காமுனம் தருவது மாத்திரமே - போதாது
9. உள்ள சுத்தம் உண்மைமொழியோடு கற்பு நன்னடக்கை
நல்லவிசுவாசமன்பு நாதன் மேலிருந்தாலன்றி - போதாது
Comments
Post a Comment