திரியேகா மரியோவா கருணை செய்வாய் காக்கவா


215. இராகம் (ஆனீரோ பாலகனே ஆதிபனே)                                     (158)

1.       திரியேகா மரியோவா கருணை செய்வாய் காக்கவா
            இருடெனையே இடர் செய்யுதே இருகரம் கொடுத்தெனை ஈடேற்றவா

2.         நிலையாத இப்பூதலத்தில் தொலையாத கவலை கொண்டேன்
            நிலையான ஏசையனே மலைக்க விடாமலென்னை ரட்சிக்கவா

3.         பரமாளும் பார்த்திபனே நரராளும் நாயகனே
            சுரர்பணியும் ஜோதிடனே சரணமுந்தாளடி பணிந்தேன்

4.         பேய்தானும் புரளிபண்ண காய்மகாரம் கொள்ளுதே
            தீக்கிடங்கில் தள்ளிவிடா திடன்பெலன் அளித்தென்னை ரட்சிக்கவா

5.         பத்தாவே பரிசுத்தாவே கர்த்தாவே காரையா
            சுத்தாதி சுத்தாவே துதிபுகழனவரதமுமுமக்கே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே