ஆ! நேசம் தனை அற்றவன்
309. மலையாமி திரசு தாளம் (290)
பல்லவி
ஆ!
நேசம் தனை அற்றவன் ஏன் பிறந்தான்?
மாதோஷம்
அவன் வாழ்க்கை நிலையாதே
ஓ மோசம் அவன் ஊதியம் தான்
அவமே
1. கண்ட சகோதரன் மேல் அன்பு கூராத
கன்னெஞ்சனானவன் தான் - காணா
அண்டர் கோமனை அறிந்தவரில் அன்
படைகுவதெப்படியோ
2. உற்ற சகோதரன் தன்னைப் பகைத்தவன்
ஓர் கொலைகாரன் என்றே - வேதம
குற்றி உரைப்பதினால் அவனைப் பழி
கூடத்தொடர்ந்திடுமே
3. கூடிக்குலாவி இருக்கும் சகோதரர்
கொள்ளும் இனிமையதை - பகை
மூடிப்பிரிந்து கலகம் புரிகின்ற
மூர்க்கன் உணரானே
4. ஆறுதலில்லை அமைதலுமில்லை அன்
பற்றவன் உள்ளமதில் - மிகு
தாறுமாறாக பல பல எண்ணங்கள்
தாக்கி உலைத்திடுமே
5. சாவு வரையில் பகையில் நிலைக்கும்
தருகணன் பேர் கெடுமே - அவன்
ஆவி பிரிந்த பிற்பாடும் எரி நர
காக்கினை சூழ்ந்திடுமே
6. இப்படி நேசமிலான் நிருவாகம்
இருக்க முயற்சியுடன் - அன்பு
துப்புரவும் மாயம் அற்றதுமாகத்
துலங்க வகை பாரும்
7. பூரண நேசம் பயத்தைச் சரிவர
போக்கடிக்கும் அதனை - சற்று
நேரம் அல்ல நீர் எந்நேரமுமுற்று
நிலைக்க வகை பாரும்
8. வேதம் முழுவதும் ஓதும் அன்பானதில்
வீற்றிருக்கின்றதினால் - அதை
நாதனுக்கேற்க அடைந்துறவாகில் எந்
நாளும் சுகிப்பீரே
9. இன்புடன் யாவரும் கலந்து குலாவிட
ஏற்ற வகை தேடும் - அதற்
கன்பின் விருந்தை அறிகுறியாக
அமைந்தங்கனல் மூட்டும்
10. தேவ வசனப்படியே இவ்வாறிங்கு
செய்ய மனமிணங்கி - அன்பை
ஆவலுடன் குறைவின்றி அடைந்திடில்
ஆனந்த பாக்கியமே - ஆ! நேசம்
Comments
Post a Comment