இந்தவேளை வரவேணும்


270. ஆனந்தபைரவி         ஆதி தாளம் (227)

பல்லவி

                   இந்தவேளை வரவேணும் என் ஏசுநாதையா

அனுபல்லவி
                        இந்த வேளை வரவேணும் இந்த வேளை வரவேணும்
                        சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை ஏசு நாதா

1.         மெத்தவே துயரமாகிறேன் வெயிலைக் கண்ட
            மெழுகுபோலே உருகி வாடுகிறேன்
            கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சிதர வாருமையா
            சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன்மலை ஏசுநாதா

2.         பத்துத்தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்த பளிங்கு மாமணி மண்டபங்களாம்
            அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
            செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை ஏசு நாதா

3.         கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல ஆவியை அருளும் இரட்சகா
            பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
            தேவநதியால் செய்யும் சீயோன்மலை ஏசு நாதா


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே