காலில்லாத பந்தலை நான்
286. (244)
பல்லவி
1. காலில்லாத
பந்தலை நான் காணக்காண வினோதமே
காட்சியே
காட்சியே காட்சியே காட்சியே - வானம்
2. செடியில்லாத புஷ்பம் தொங்குது
திருகக் கெரய்யக் கூடுதில்லை, செப்புங்கோ
நட்சத்திரங்கள்
3. ஜெந்திடாத முட்டைகளதோ சக்கரமிட்டாடுதே
ஜாலமோ ஜாலமோ ஜாலமோ ஜாலமோ - சூரிய சந்திரர்
4. ரூபம் சிறகில்லாத பறவை சூழ ஓடித் திரிந்து
நுவலுங்கோ நுவலுங்கோ நுவலுங்கோ நுவலுங்கோ - மேகம்
5. மண்ணைச் சூழப்படுத்தியங்குது வாலில்லாமல்
முழங்குது
மாயமோ மாயமோ மாயமோ மாயமோ - மின்னல் முழக்கம்
6. காலில்லாத கரும்புரவிகள் கடிவாளமின்றிப் பறக்குது
கரையுது மறையுது திரையுது உரையுது - மழை மேகம்
7. பளிச்சென்கிறத இரை விழுங்குது பார்த்திருக்கவே
காணலை
பாருங்கோ வாருங்கோ கூறுங்கோ ஓதுங்கோ - மின்னல்
8. ஓடுது மலம்பாம்பூர்நடுவே ஓட ஒன்றதை விழுங்குது
உண்மையே உண்மையே உண்மையே உண்மையே - ஆறு
9. ஜீவனின்றிப் படுத்திருக்குது சீறிக்கண்ணீர்
வடிக்குது
தீட்டுங்கோ தீட்டுங்கோ தீட்டுங்கோ தீட்டுங்கோ - மேகம்
10. கால் உடலில்லை வால் தெரியுது கர்ச்சிப்பதையும்
கேளுங்கள்
சப்தங்கேள் சப்தங்கேள் சப்தங்கேள் சப்தங்கேள் - இடி முழக்கம்
11. மடுவில்லாமல் பால் கறக்குது வருணமில்லை மண்டலம்
மாயமோ மாயமோ மாயமோ மாயமோ - மழை
Comments
Post a Comment