பாலா பாலனே சிறுபாலா


268. பியாகு       ஆதி தாளம் (225)

பல்லவி

                   பாலா பாலனே சிறுபாலா பாலனே கண்ணே
                   பாலா பாலனைப்பெற்று வளர்ந்தேனே பாலா பாலனே உன்னை
                        நைல் ஆற்றினில் நான் போட்டிடவும் நாளும் வந்ததுவோ

1.         காலா காலமோ கண்ணே கர்த்தரின் செயலாமோ ஓகோ
            சீலா சிறுவ சுதனைப்பிரியக்காலம் வந்ததுவோ

2.         அன்னக்கிளியரசே உந்தன் அழுகுரலோசைதனையாரும்
            அறியாதடக்கி ஆளுவதருமை ஐயோ என்செய்வேன்

3.         நெஞ்சம் அஞ்சாமல் மகனே நீரில் விட்டெரிய ஓகோ
            கொற்றவன் கொடியவன் கொலையவன் சதியால் கொடுந்துயர் பெறலானேன்

4.         நாணற் புற்பெட்டி மகனே நல்ல புல்பெட்டி நானும்
            தோணிக்கிசையை கீலும் பிசினும் துரையே பூசினேன்

5.         அக்காள் உன்பக்கம் மகனே ஆண்டவர் எப்பக்கம் பார்வோன்
            மக்கள் வருகிற பக்கமாய் நதியில் மகனே உனை வைத்தேன்    - பாலா



Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு