என் கண்ணே எனக்கென்னேரமும்
287. பியாகு ஆதி தாளம் (245)
பல்லவி
என்
கண்ணே எனக்கென்னேரமும் நின் ஞாபகமே
அனுபல்லவி
காடு மேடு வீடு நாடோடிடு முன்னோடு
தானும்
1. உன்னாசை மிஞ்சி மனமுருகி நிதம் கெஞ்சி - குரு
மன்னா உனைக் கொஞ்சி நானும் மகிழுகேறேன்
ரஞ்சி
2. லோகம் பகைத்தாலும் மா ஈனர் தூஷித்தாலும்
- கொடும்
நாகம் புரண்டாலும் உனின் நாட்டமே எந்நேரம்
3. ஜீவன் முக்தி காண வகை செப்பினாயே தோண - தேவ
பக்தி மிகப்பூண அருள்செய்வீர் நானும் காண
4. பரமகுருமூர்த்தி உனின் பாதமே என் பூர்த்தி
- ஞான
தருமநேசன் கீர்த்தி அதன் சங்கீதத்தின்
நேர்த்தி
5. ரத்னப்பரதேசி உனின் நயந்த விசுவாசி - உன்
சத்திய அரள் வீசி மனோ தயை செய் விசுவாசி
Comments
Post a Comment