கை நிறைந்த கருவேலமே
282. (240)
பல்லவி
கை
நிறைந்த கருவேலமே
கண்டு
களிக்கலாம் முத்தேலமே - என்
1. அண்டபுவனமதில் அரிய ஓர் ஆணிமுத்து
பண்டுலகோர் தேடிப்பார்த்தடையா வானமுத்து
ரண்டு மூன்று என்று சொல்ல ஞாயமில்லை ஏகமுத்து
கண்டவர்கள் வாங்கிடாமல் கண்டடையா யோகமுத்து
2. ஆதிமுத்து ஜோதிமுத்து அந்தரங்கமான முத்து
ஆருக்குங்கிட்டாது அன்பருக்கமைந்த முத்து
நீதிமுத்து வேதமுத்து நேசமுத்து ராஜமுத்து
நிமிஷத்துக்கோர் வருணம் நேர்ந்திலங்கும்
ஜீவமுத்து
3. அம்பரத்தில் ஆனமுத்து அலங்காரமான முத்து
அஞ்சுரண்டை ஒன்றதாக்கி அறிபவர்க்கேற்ற
முத்து
கொஞ்சுமுத்து பஞ்சகுணம் குடிகொண்ட யாகமுத்து
கோடி கோடியே கொடுக்கும் தோடார்க்கெட்டாத
முத்து
4. சச்சிதானந்த முத்து சுவாமி கிறிஸ்தான முத்து
சத்துருவை வசப்படுத்துமுத்து சாந்தமுத்து
கெர்ச்சனையாய்த்திரியும் கெடுகூளியோட்டுமுத்து
கிருபைக்கடிமை ரத்னம் கெஞ்சுமுத்து தஞ்சமுத்து
Comments
Post a Comment