அன்னமே சீயோனே எந்தன்


261. தன்யாசி                 ஆதி தாளம் (218)

1.       அன்னமே சீயோனே எந்தன்
          சொர்ணமே உன் நேசரிதோ
            வாசலண்டை கூவி நிற்கிறார்!!
            பிரியமே உன் ஆசைகொண்டுலாவி நிற்கிறார்!! என்
            துத்திமியே மகா பத்தினியே
            உனதத்தனிதோ பனிமத்தியில் நிற்கிறார்
            ஓடிவந்தென்முகம் பாராயோ
            உள்ளே அழைத்துன் நேசரிடம் ஓர் சொல் கூறாயோ

2.         வஸ்திரங் கழற்றி இப்போ
            நித்திரை செய்கின்ற என்னை
            வா வா வென்றழைக்கிறவர் யார்?
            மகாத்திரமாய் ராவே வந்தழைக்கிறவர் யார் - இங்கு
            செப்பமதாகவே நித்திரை செய்கையில்
            சொப்பனமோ இது மெய்ப்பொருளோ
            சோதிக்க என்னால் கூடுதில்லை
            ஐயோ எனக்குப் பாதிக்கண்ணுறக்கயில்லையே

3.         நித்திரை மயக்கத்தாலுன்
            அத்தனை மறந்துவிட்டநேசமணி லீலி புஷ்பம்
            எங்குமணக்கும் ஆசையுள்ள
            ரோஜா புஷ்பமே - இங்கே
            அத்தி மரங்களும் பூத்தது காய்த்தது
            கொத்துத் திராட்சைக் குலைகளிலிலங்குது
            கோதையே என்னோடெழுந்து வா
            நேரமாகுது தாவியே எழுந்து ஓடிவா

4.         என்னினிய தோழியரே
            எந்தன் சகோதரிகளே என்னருமை நேசர் சாயலை
            நானென்ன சொல்வேன் பொன்னகரிலுள்ளோர் அவரே
            பதினாயிரம் பேரில் சிறந்தவராம்
            தலைமேவிய தங்கமும் தாவிய அங்கமும்
            இந்திர நீல ரத்தினங்களாம்
            இழைத்த பிரகாசமான யானைத் தந்தமாம்

5.         எந்தனுட தோழிகளே எருசலேமின் மக்களே
            என்னருமை நேசரெங்கம்மா
            ஐயோ பாவி நான் இனி என்ன செய்குவேன் சும்மா
            என் நாயகனார் தலை வாசலிலே மலை
            வாகவே நின்றெனைக் கூவியழைக்கையில்
            நானுமங்கே வந்தேனில்லையே
            பிறகு வந்தால் நேசரங்கு தானுமில்லையே

6.         நேசரின் ரூபவதியே உந்தன் நேசர் எங்கே போனார்
            உன்னோடு கூடவே நாங்களும்
            வழி பிடித்து மன்னனைத் தேடுவோம் வாருங்கள்
            இவரத்தனார் ஏசு மகத்வனார் நம்மையே
            முக்திலோகத்தினில் சேர்ப்பதற்காகவே
            இத்தனை தூரமே தாழ்த்தினார்
            வாருங்கள் சென்று கர்த்தனைக் கண்டங்கு வாழ்த்தலாம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு