ஆண்டவர் வேதம் குறைவற்றதினால்
304. சகானா ஆதி
தாளம் (284)
பல்லவி
ஆண்டவர்
வேதம் குறைவற்றதினால் ஆத்துமமுயிரடையும்
1. ஆண்டவர் சாட்சி சத்தியமே அதனால் பேதையும்
நல்ஞானி-நமதாண்டவர் கற்பனை செம்மை நல்லிதய
ஆண்ட
ஆனந்தமாகிடுமே அருளானந்தமாமே - ஆண்டவர்
2. ஏகோவா கற்பனை துய்ய வெள்ளை இருட்கண் தனக்கது
வெளிச்சமுமாம்
நமதெகோவாவுக் கஞ்சுதல் பரிசுத்தம்தானே
என்றென்றும் அதுவே நிற்கும் இன்பநிலையுள்ளதாமே
- ஆண்டவர்
3. ஏகோவா ஞாயங்கள் உண்மையதாகும் எல்லாம் அதுகள்
நீதியுமாம்-பின்னும், வெகுவாம் அபரஞ்சிப்
பொன்னிலும் அதுகள்
விரும்பிடத் தக்கதுகள்; வெகு இனிமையுமாமே
- ஆண்டவர்
4. தேன் கூண்டொழுதல் தேனிலுமதுகள் திகட்ட மதுரமதாயிருக்கும்
பின்னும், நானுமதடியேன் தானுமதினால் நல்
எச்சரிப்படைவேன்
இனிமை எச்சரிப்பாமே -
ஆண்டவர்
5. அதுகளைக் கைக்கொண்டு வருவதினால் அநேக பலனுண்டாகிறதே
ஆகா, அதுகளால் தன் பிழை உணர்ந்தறிந்திடுவோர்
ஆர் இந்தப்
பூமியிலே; அருள் தெளிவின் கண்ணாடி - ஆண்டவர்
6. மறைவாம் பாவப்பிழைகளாலடியேன் மடியாப்படிக்
கதை
விலக்கிடுமே-பின்னும், அறிவின் துணிகரப்
பாவமுமென்னை
அளாப்படிவிலக்கும்; அறிவு காட்டிய விளக்கே - ஆண்டவர்
7. அப்பொழுதடியே னிருதய உண்மை அடைந்தவனாக இருப்பேனே
பின்னும் தப்பிதம் பெரிய பாதகத்திரட்குஞ்
சாய்வின்றி
நீங்கிடுவேன்; சருவ சத்திய நிலையே - ஆண்டவர்
8. என் கன்மலையும் மீட்பருமான ஏகோவாவே உமக்கு
முன்
உமக்கேற்க; இப்போ என் வாய் சொற்களும் இருதய
நினைவும்
இன்பமாயிருக்கட்டுமே; இன்ப இருதய நிலையே - ஆண்டவர்
Comments
Post a Comment