கருணாலய பீடா - எமைக்


296.                                                        (275)

பல்லவி

                   கருணாலய பீடா - எமைக்
                        காராயா மா ஜீவா கீரீடா

அனுபல்லவி

            காரணா சம்பூரணா விஸ்தீரணா உதாரணா      - கருணாலய

1.         எரிதழ லதிநெளி கிருமியதாய்
            பொரிபடு சிறியனின் புகலிடமாய்
            குருஜெப தரிசனமருள் தயவாய்
            சரி சரி யொருபர நவமணியாய்
            மரிசுதனுனைவிட மறு துணை இலை இலை
            மனமகிழ்ந்தெனையொரு மகவெனப்பிடி           - கருணாலய

2.         அரவின் கடியால் தேரையுமானேன்
            அகலஎறி தாமரை நிகரானேன்
            பரவுங்கடலில் திரணமுமானேன்
            பலரும் வசையாய் பகரவுமானேன்
            தருவின் கனியால் பெரும் பாரமிது
            தலைமேல் சுமர சதைந்தேன் பிடி                    - கருணாலய

3.         வேதநாயகமே பரம
            தாதையே அணைசோதரமே
            ஆதரை நராஸ்தரமே
            நீதமே செய்கிரு பாகரமே
            ஓதரத்தினம் கீதமுன் புகழ்
            நாதனே எனைப் பாதுகார்                                 - கருணாலய

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு