மனமயங்காதே என் மானே


281. கமாஸ்                ஆதி தாளம் (239)

பல்லவி

                   மனமயங்காதே என் மானே மனமயங்காதே
                  
அனுபல்லவி

                   நான் வான் போய் வருவேன் திகையாதே
                        கனமே எருசலையில் வாழன்னமே கண்ணே கலங்காதே

1.         மனுவேல் தம்பிரானே என் பிராணா
            வானாசனத்திலிருப்போனே
            அநியாயப் பாழுலகில் கொடிதாய்
            அவதியுத்திரிப்பேனோ என் நாதா

2.         உத்தரிப்பாயன்னமே சீயோனே
            உலகம் பகையே செய்யும் தினமே
            சத்திய வேத விரோதிகளை
            சங்கரிக்க வருவேனினிமேல் என் மானே

3.         இனிமேல் வருவோனே என் நாதா
            என் ஆத்தும நேசர் என் பெருமானே
            மனமே சகியேனே உனைப்பிரிய
            மாலாய் மலைவேனே என் நாதா

4.         மலைவானேன் பெண்ணே சீயோனே
            என் வாஞ்சைக்கினிதாகிய கண்ணே
            நிலையாம் வாசஸ்தலமாயத்தம்
            நீடி வருவேன் விண்ணே என் மானே

5.         விண்ணுலகத்தேறி என் சுவாமி
            வீற்றிருந்துனதருள் உரை கூறி
            மண்ணுலகில் திரும்பா முன வருமே
            மருளலகைகள் சீறி என் பிராணா

6.         சீரும் திகையாதே என் கண்ணே
            திருவருள் உண்டென் பிரிய மாதே
            ஈராந்த காலமட்டும் உன்னோடிருப்போம்
            முப்போதே என் மானே

7.         போதுமிருப்பேனே என் நாதா
            பூமானே என் கோமானே
            வேதநாயகன் ஓதிய பாடலை
            மேவிய சீமானை என் பிராணா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு