தேவா நீ கோபம் வைக்காதே


263. இராகம் (காலமே தேவனைத்தேடு)      (220)

பல்லவி

                   தேவா நீ கோபம் வைக்காதே - உந்தன்
                   சிறு மந்தை கண்ணோக்கி திரும்பும் இப்போதே

அனுபல்லவி

            பாவிகளானோம் உன் பாதம் தான் நீங்கி
            பட்சம் வைத்திரங்குமுன் கிருபைாயால் தாங்கி

1.         மூவுலகாளும் ஏகோவா - எங்கள்
            முன்னொனபிராம் ஈசாக் யாக்கோபின் தேவா
            ஓய்வுநாளை மீறி உன்மறை கடந்து
            பாவிகளானோம் கைவிடாதேயும் நெகிழ்ந்த

2.         இரட்சகா ரட்சியுமிந்த வேளை - எனக்
            கிரங்குமிரங்குமெனக் கெஞ்சுகிறேன் தாழ
            பட்சம் வைத்தெங்களின் பாவம் பொறையா
            பகர்ந்த உன் தீங்கை நீ தவிருமேனையா

3.         கோபம் கொள்ளேல் எங்கள் சுவாமி - நீ
            கோபம்வைத்தால் அதைத் தாங்குமோ பூமி
            ஜீவபாதை மறந்து தீங்குக்குள்ளானோம்
            பாவிகளானோம் நீ பாதுகாரையா

4.         அல்பா ஒமேகாவும் நீயே - எமை
            ஆதரிக்கும் எங்கள் அடைக்கலம் நீயே
            வல்வினை அகற்றியே மாபாவம் தீரும்
            சகலவித கெட்ட சாத்தானைப் பீறும்

5.         இரக்கத்தின் கொம்புதான் நீயே - எமை
            ரட்சிக்கும் சாலேமின் ராஜாவும் நீயே
            உருக்கமாயிரங்கி உன் மந்தையைக் காரும்
            உரைத்த தீங்ககற்ற நீர் ஜல்தியாய் வாரும்

6.         கண்ணீரை அப்பமாய் கொடாதே - எங்கள்
            கர்த்தாவே நீயதைப்பான மாயீயாதே
            அண்ணன் இசரேலை ஆதரித்தாற்போல்
            அழிவுக்குக்கோரின் நினிவைக்காத்தாற்போல்

7.         பாவிகள் மீட்பரும் நீரே - எங்கள்
            பாவமகற்ற ரத்தம் சிந்தினோர் நீரே
            தாவி உம்மந்தையை சுவாமி நீர் காரும்
            சாலேமின் ராஜாவே இவ்வேளை வாரும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு