வேதவசன விதைகளைப் புவியில்
246. செஞ்சுருட்டி ஆதி
தாளம் (198)
பல்லவி
வேதவசன விதைகளைப்
புவியில்
விதைப்பில் தெளிப்பில் வெகு நல்ல பாடம்
அனுபல்லவி
பாடுபட்டு விதைக்கும் பக்தனருள்வேதம்
பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம்
1. அதிசய வசனமிந்திய கரையில்
செடியாய் மரமாய் நடப்பட்டு வருதே
நடப்பட்டு வருதே நலமிக்கத்தருதே
பெரும்பாவியிடத்தில் பேர்பெற்று வருதே -வேதவசன
2. தீயராம் பாவிகள் துன்புறும் வேளையில்
தூணாய் துணையாய் துலங்கிடும் வசனம்
இந்தியர் மனதில் இறுக வேர்ப்போட
ஈசனின் கிருபை இலங்கிடச் செய்யும் - வேதவசன
3. நால்வகைத் தாளமேளங்கள் கொட்ட
ஆடப்பாட சபைமிகக்கூட
சபைமிகக்கூட சங்கீதங்கள் பாட
சாமி வந்து சேர சந்தோஷங் கொண்டாட - வேதவசன
Comments
Post a Comment