விச்சித்திரமென் குறியம்மே
310. செஞ்சுருட்டி சாப்பு தாளம் (297)
பல்லவி
விச்சித்திரமென்
குறியம்மே - பன்னிரு
நட்சத்திரம்
பூண்ட நராதிபப் பெண்ணே
அனுபல்லவி
அச்சய தேசமதான - யோர்தா
னாறோடுங்கானானு தேசமதெங்கும்
நிச்சயமாய் குறி சொல்லி -
நான் பெற்ற
நேரான விருதுகள் பாராய் நீ
அம்மே - விச்சித்
1. முன்னாளி லெகிபத்துத் தேயந் - தன்னை
முக்கியமாயாண்ட பார்வோனு வென்ற
மன்னோனிடத்திற் சென்று - அவன்
மந்திரியாக விருந்து கொண்டன்று
தென்னாரும் யாக்கோபுத் தீர்க்க - னருளிய
தேசிகனாகிய யோசேப்பு சிங்கன்
சொன்ன குறியதினாலே - பெற்ற
சுந்தரமோதிர மிந்தா பாரம்மே - விச்சித்
2. அன்பாக நேபுதாத் நேச்சா - ரென்ற
அண்ணலுல கினையாண்டரும் நாளில்
வன்பாக சாஸ்திரிமார்கள் - சொன்ன
மாறாட்டக்குறி மெத்தப் போராட்டமென்று
தென்பாக அவர்களை வெட்ட - அந்தச்
செய்தியைக் கேட்டெங்கள் தானியேல் தீர்க்கன்
நண்பாக மெய்க்குறி சொல்லிப் - பெற்ற
ரத்தின சரப்பளி மெத்தவுண்டம்மே - விச்சித்
3. எலியாசுத்தீர்க்கனினாளி - லுல
கெங்கேயும் கடும்பஞ்ச முண்டானபோது
தொலையாத கவலையினாலே - காட்டிற்
சுள்ளியொடிக்க வந்த கைம்பெண்டீரண்டை
மலையாதே எண்ணையுமாவு - மினி
வற்றாது என்றவனுத்தாரம் சொல்லப்
பலகாரம் தோசைகள் சுட்டு - அவன்
படைத்துப் படைத்துக் குறி கேட்கலையோ அம்மே - விச்சித்
4. நூற்றுயிருபதாண்டாக - எங்கள்
நோவாவுத்தீர்க்கனும் வாகாகச் சொன்ன
தேற்றுதலாங்குறி கேட்டுத் - தவஞ்
செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள
மாற்றமில்லாதவன் விட்ட - கன
மாரியிலே மகா வீரியமாக
ஏற்றத்திலே தப்பிப்போன - அந்த
எட்டுப்பேரெங்களுக்குக் கிட்டத்தானம்மே - விச்சித்
5. வானோனும் நினிவை மாநகரை - யொரு
மண்டல நாற்பத நாளைக்குள்ளாகத்
தானாக அறிவுறச் செய்வோ - மதைச்
சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கோத
ஆனாலும் நானம்பமாட்டே-னென்
றப்பாலே யோடியோர் கப்பற்குள்ளேக
மீனாலே அவன் தனைப்பிடித்துப் - பின்னும்
வீட்டுக்குறி சொன்ன மேன்மை பாரம்மே - விச்சித்
6. ஏசையா எரேமியாத் தீர்க்கன் - மறை
எசேக்கி யேலுடன் தானியேல் தீர்க்கன்
ஓசையா மல்கியா தீர்க்க - னுயர்
யோவேல் செப்பனியா சகரியா தீர்க்கன்
மோசேசு எலியாசு தீர்க்க-னந்த
முக்கிய சாமுவேல் தாவீதுத் தீர்க்கன்
மேசியாத் தீர்க்கனின் மேலே - சொன்ன
மெய்யான குறியிப்போ கைமேற் பாரம்மே - விச்சித்
Comments
Post a Comment