30 June 2018

ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி


                   ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி
                        இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி
                        பாமில்லாப் பாடு பரலோக நாடு
                        அந்த நாடு சேர இயேசுவே வழி (2)

1.         பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்
            கலங்கிச் சோர்வாயொ?
            நோக்கிப்பார் இயேசுவை
            நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார்                  - ஒரே வழி

2.         பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி
            பாரம் சுமப்பாயோ?
            நோக்கிப்பார் இயேசுவை
            பாவமும் பாரமும் நீக்கிடுவார்                            - ஒரே வழி

3.         திரும்பி நீ பார்த்துமே பாவத்தில் விழுந்து
            நிம்மதி இழந்தாயோ?
            நோக்கிப்பார் இயேசுவை
            இரட்சிப்பின் சந்தோஷம் தந்திடுவார்              - ஒரே வழி

4.         பாவத்தின் சம்பளம் மரணத்தை அழிக்க
            இயேசு தோன்றினார்
            மரித்தாரே உயிர்த்தாரே
            பாதையாய் தீபமாய் மாறினாரே                          - ஒரே வழி

சுய அதிகாரா சுந்தரக் குமாரா


பல்லவி

          சுய அதிகாரா சுந்தரக் குமாரா
            சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான             - சுய

சரணங்கள்

1.         அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
            அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
            துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
            ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த             - சுய

2.         கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?
            கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?
            திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
            சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும்                    - சுய

3.         நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
            நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
            மர முயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
            வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த    - சுய

4.         பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
            பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
            சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
            தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம், கெஞ்சமனுக் கேட்டருள்வாய்               - சுய

பாவி வா, பாவி வா பரனண்டையே வா


சரணங்கள்

1.       பாவி வா, பாவி வா பரனண்டையே வா
          பாவப் பாரம் சுமந்திளைத்தோனே நீ வா

2.         பாவி வா, பாவி வா திகையாதே நீ வா
            வரும் பாவியை ஓர் போதும் தள்ளேனே வா

3.         காணாத ஆட்டை மேய்ப்பன் தேடும் மாதிரிபோல்
            நானே நல்ல மேய்ப்பன் உன்னைத் தேடி வந்தேன்

4.         தாகம் மிகுந்தோனே, தண்ணீரண்டை நீ வா
            தாகம் தீர்த்திடுவேன் ஜீவ தண்ணீரினால்

5.         உந்தன் பாவத்துக்காய் நானே பாடுபட்டேன்
            எந்தனுக்கு உந்தன் நெஞ்சம் தந்திடவா

6.         உனக்காய் மரித்தேன் ஈனக் கோலமதாய்
            எனக்கே உனையே படைப்பாய் நிதமே.

கிறிஸ்து இயேசு தயாள பிரபு


                   கிறிஸ்து இயேசு தயாள பிரபு
                        சிருஷ்டித்த தயவு
                        இரட்சித்த உந்தன் முடிவு
                        கீதம் பாடவே

சரணங்கள்

1.         மாநிலத்தில் நீர் மானிடனானீர்
            மாந்தர்கள் மத்தியில் சுற்றித் திரிந்தீர்
            மாபெரும் துன்ப துக்கங்கள் ஏற்றீர்
            பாவி என்னை இரட்சிக்க                                 - பிரிய இயேசு

2.         விஸ்வாசப் பேழை ஆழியிலிருக்க
            புயல்களெல்லாம் அலைக் கழிக்க
            இயேசுவே நீரே அலை அதட்டி
            அக்கரைப் படுத்தினீர்                                      - பிரிய இயேசு

3.         பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன்
            பாடுகள் பட்டும் பயனைக் காணேன்
            பின்வந்து உந்தன் வஸ்திரந் தொட்டேன்
            பிழைத்தேன் அச்சணமே                                 - பிரிய இயேசு

காப்பார் உன்னைக் காப்பார்


பல்லவி

                   காப்பார் உன்னைக் காப்பார்
                        காத்தவர் காப்பார், இன்னும் இனிமேல் காத்திடுவார்
                        கலங்காதே மனமே - காத்திடுவார்

சரணங்கள்

1.         கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார், அவர் கைவிடாதிருப்பார்
            ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
            என்ணிப்பார், என்ணிப்பார், எண்ணிப்பார்
            ஒன்றொன்றாயதை எண்ணிப்பார்                                                           - காப்பார்

2.         இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
            இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
            இல்லையோ, இல்லையோ, இல்லையோ
            மனஸ்தாபம் கொள்ளவில்லையோ                                                         - காப்பார்

3.         வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
            சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
            ஜெயமும், கனமும், சுகமும்
            இரக்கமா யுனக்களிப்பவரும்                                                                 - காப்பார்

4.         தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
            காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
            அன்பு கொண்டு மணந்தவரே                                                                - காப்பார்

5.         ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
            காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
            பரிசுத்தத்தில் லங்கரித்தார்                                                                  - காப்பார்

கல்லறைக் காவலில் காயமுடன்


                   கல்லறைக் காவலில் காயமுடன்
                        கடும் அசுத்தாவி பிடித்தோனவன்
                        கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்

1.         விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் - இனி
            வேதனை வேண்டாமென்றான்
            விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே                    - கல்லறை

2.         கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல - அவை
            கடலினில் மாய்ந்தனவே
            கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே             - கல்லறை

3.         அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு
            நாதனைக் கண்டோடும்
            அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே             - கல்லறை

அன்பர் அன்பை யாரால் கூறலாம்

கன்:353

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

பல்லவி

 

            அன்பர் அன்பை யாரால் கூறலாம் - ஆ! ஆச்சரியம்

            அன்பாகவே இருக்கும் என் நேசர்!

 

அனுபல்லவி

 

            அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!

            அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்!        - அன்பர்

 

சரணங்கள்

 

1.         எல்லா ஜலமும் மையானாலுமே - அன்பை எழுதிட

            எல்லா மரமும் பேனாவானாலுமே

            ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்

            அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு          - அன்பர்

 

2.         மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் - ஆழ்ந்து தூதரும்

            பார்ப்பதில் பணிந்து குணிகிறார்

            பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது

            என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்!           - அன்பர்

 

3.         ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் - ஆ! ஏராளம்

            ஏழை என்னால் பகரக் கூடுமோ

            அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்

            அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! - அன்பர்

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ!

கன்:352

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை

                        அழைத்தீரரசே அருளாலே

 

                             சரணங்கள்

 

1.         நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை

            நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து

            மந்தையில் சேர்த்துக் கொண்டீரே - அன்பிதோ

 

2.         சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்

            மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்

            சித்தத்தைச் செய்யச் செய்தீரே - அன்பிதோ

 

3.         ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்

            ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்

            என்னை பேரின்பமெனக்கே - அன்பிதோ

 

4.         தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த

            தூய கீதமுடன் துயருடன் பாட

            ஏழைக்கும் கிருபை செய்தீரே!  - அன்பிதோ

 

5.         உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்

            உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்

            தங்கிடத் தயவருளும் - அன்பிதோ

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...