என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என்
வாழ்விலே குறைகள் என்பது ஏன்?
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா -
என்
2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடனே நான் அஞ்சிடனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடனே -
என்
3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா -
என்
4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன். - என்
5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் -
என்
6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே - என்
Comments
Post a Comment