09 July 2018

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

            விசுவாசியே பதறாதே

 

                        கலங்காதே திகையாதே விசுவாசியே

                        கல்வாரி நாயகன் கைவிடாரே -2

 

1.         கொடும் வறுமையின் உழன்றாலும்

            கடும் பசியினில் வாடினாலும்

            அன்று எலியாவை போஷித்தவர் - இன்று

            உன் பசி ஆற்றிடாரோ - கலங்காதே

 

2.         பெரும் நோய்தனில் கலங்கிடாதே

            பாசத்தால் உன்னை சோதிப்பாரே

            திமிர் வாதத்தால் அசைவற்றவன் - தேவ

            தயவினால் நடக்கலையோ - கலங்காதே

 

3.         தந்தை தாய் உன்னை வெறுத்திட்டாலும்

            பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்

            நிந்தை தாங்கிட்ட தேவன் உன்னை - சொந்த

            கரங்களால் அணைத்துக் கொள்வார் - கலங்காதே

 

 

4.         பிறர் வசை கூறி துன்புறுத்தி

            இல்லாதது சொல்லும் போது

            நீ மகிழ்ந்து களி கூறு

            விண் கைமாறு மிகுதியாகும் - கலங்காதே

 

5.         தேவன் கைகளும் குறுகிடாதே

            தேவ வாக்குகள் மாறிடாதே

            கண்கள் தூங்காது தினம் காத்திடும்

            கர்த்தர் ஒருபோதும் கைவிடாரே - கலங்காதே

 

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...