09 July 2018

இயேசுவின் மகிமையைப் பாடுவோம்


                        இயேசுவின் மகிமையைப் பாடுவோம்
                        இயேசுவின் மகிமைக்காய் வாழுவோம் (2)
                   இயேசுவே எங்கள் மேன்மையே
                        இயேசுவே எங்கள் மகிமையே

1.         இயேசுவின் பெயரைச் சொல்லவே
            பேய்களும் பறந்தோடுதே
            இயேசுவின் நாமம் கூறவே
            நோய்களும் குணமாகுதே                     - இயேசுவின்

2.         இயேசுவின் வேதம் படிக்கவே
            பேதையும் ஞானியாகிறான்
            இயேசுவின் பாதை நடக்கவே
            பாவியும் தூய்மை அடைகிறான்            - இயேசுவின்

3.         இயேசுவின் சிலுவை காணவே
            கல்மனம் கரைந்து உருகுதே
            இயேசுவின் இரத்தம் சொல்லவே
            துன்பமும் நீங்கிப் போகுதே                   - இயேசுவின்  

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...