10 July 2018

சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க


                   சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க - இது
                        சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க
                        எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க
                        நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

சரணங்கள்

1.         ஏரோது இராஜாவாயிருக்க லாமுங்க -இவர்
            சர்வ லோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க
            பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க
            நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

2.         யூதமதத் தலைவரென்று நினைக்காதீங்க - உங்கள்
            மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க
            உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க
            நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

3.         படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க - இந்த
            பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க
            புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க
            நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...