மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு


பல்லவி

          மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு - மங்கள வாழ்வு
            மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1.         துணை பிரியாது, தோகையிம்மாது
            துப மண மகளிவர் இதுபோது
            மனமுறை யோது வசனம் விடாது
            வந்தன ருமதருள் பெறவேது - நல்ல                 - மண

2.         ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
            தெய்வீக மாமண வலங்காரா,
            தேவ குமாரா, திருவெல்லையூரா
            சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா? - நல்ல         - மண

3.         குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
            கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
            அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
            அம்புவி தனில் மனைக்கலங்காரம் - நல்ல        - மண

4.         மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
            மந்திரம் அவர்குறை மேதாவி
            மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
            அவளையில்லாதவ னொரு பாவி - நல்ல          - மண

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு