22 August 2025

போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே

போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          போற்றுவோம் போற்றுவோம்

            இயேசுவையே போற்றுவோம்

            துதி சாற்றுவோம் சாற்றுவோம்

            கர்த்தருக்கே சாற்றுவோம்

 

                        நமக்காய் மண்ணில் வந்து

                        பிறந்தவரை போற்றுவோம்

                        நம்மையும் மீட்க வந்த

                        மீட்பரையே போற்றுவோம்

                        இயேசுவின் நாமமே நமது மேன்மையே - போற்றுவோம்

 

1.         விண்ணுலக ரோஜாவோ மண்ணில் வந்து பூத்ததோ

            விண்தூத சேனையெல்லாம் வாழ்த்து பாட வந்ததோ

            விண்மீன்கள் கூட்டத்தில் இவர் விடிவுகால வெள்ளியோ

            ராஜாக்கள் கூட்டத்தில் இவர் ராஜாதி ராஜாவோ

 

            இவரும் நம்மை மேய்க்கும் நல்ல மேய்ப்பர் என்பதாலோ

            இவரையுமே மேய்ப்பர்களும் தேடியே வந்தார்களோ

 

            நம் இதயம் கூட இன்று ஒரு மாட்டுத் தொழுவந்தானே

            இதில் பிறந்திடவே ராஜா  இயேசுவே வந்தாரே - போற்றுவோம்

 

2.         உலகத்தின் ஒளியே மங்கிடாத மகிமையே

            எந்த மனிதனையும் பிரகாசிக்கின்ற ஒளியே

            இருளை போக்க வந்த விடியற்கால வெளிச்சமே

            இன்னல்கள் போக்க எந்தன் உள்ளம் வந்த இயேசுவே

 

            பாவங்கள் போக்கிடவே மண்ணில் பிறந்தாரே

            பரலோகில் சேர்த்திடவே என்னில் பிறந்தாரே

 

            இவரே மெய்யான தேவன் நம்மை தேடி வந்த தெய்வம்

            உயிருள்ள நாளெல்லாம் அவரையே பாடுவோம் - போற்றுவோம்

 

 

- SJC. Selvakumar

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...