07 August 2025

அன்பு தேவை அன்பு தேவை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர

            பாரத மண்ணில் அமைதி போனதே

            பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக

            பாரதம் போர்களம் போல் ஆனதே

 

                        கார்மேகக் கூட்டம் எல்லாம்

                                    மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும்

                        பண் பாடும் குயிலின் இனமும்

                                    காசு வாங்கியா அழகாய் கூவும்

                        மலர் கூட்டம் வேண்டிய மனிதர்

                                    என்று பார்த்திட்டா மணத்தை வீசும்

                        மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன்

                                    விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும்

 

            அன்பு தேவை அன்பு தேவை

            அன்பு தெய்வத்தின் அனுபவம் தேவை

            அன்பின் தெய்வம் இயேசு தெய்வம்

            அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை - 2

 

                        வந்தே மாதரம் சொல்லும்போது

                        தேசிய ஒற்றுமை ஓங்குமே

                        இயேசுவின் பாரதம் ஆகும்போது

                        அன்பும் அமைதியும் தங்குமே - 2

 

            பிழைப்புக்காக மக்கட்குள்ளே பிளவை

            உண்டுபண்ணும் சிலரும்

            பதவிக்காக பிறரின் நலனை

            பலி கொடுக்கும் பாதகரும்

            புகழுக்காக எதையும் செய்யும்

            போலிக் கொள்கையோடு சிலரும்

            உணரும் வரை இந்தியாவின்

            ஒருமைப்பாடு கனவாய் இருக்கும் - (2)

 

            மதங்கள் என்னும் பிரிவுகள் எல்லாம்

            மனிதன் தந்த பெயர்கள் தானே

            மனங்கள் அடையும் சுத்தம் ஒன்றே

            இறைவன் வேண்டும் மாற்றம் இன்றே

            உண்மையறியா பலரும் உண்டே

            உணருவாயே தேவ ஜனமே

            இயேசு நாமம் அறிவிக்கவே

            முன் செல்வாயா இளைஞனே - அன்பு தேவை

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...