போற்றித் துதித்திடுவோம் அன்பின்
போற்றி துதித்திடுவோம்
அன்பின்
இயேசுவையே - 2
ஸ்தோத்திரமே
துதி பலிகள்
ஆனந்தமாய்
செலுத்திடுவோம்
- 2
1. நம்பிடும்
மாந்தரை காப்பவராம்
நம்பிக்கை
யாவும் தருபவராம்
- 2
மகிழ்வுடனே
துதித்திடுவோம்
- (2)
மகிபன்
இயேசுவை உயர்த்திடுவோம்
- (2) - போற்றி
2. அதிசயம்
அற்புதம் செய்பவராம்
ஆயிரம்
நன்மைகள் அளிப்பவராம்
- 2
நோய் பிணிகள்
நீக்கிடுவார்
- (2)
தெய்வீக
சுகமே தந்திடுவார்
- (2) - போற்றி
3. தாழ்வினிலிருந்து
தூக்கினாரே
தயவுடன்
நம்மை நினைத்தாரே
- 2
வாழ்த்திடுவோம்
போற்றிடுவோம்
- (2)
ஆயிரம்
ஸ்தோத்திரம் செலுத்திடுவோம்
- (2) - போற்றி
4. காலமெல்லாம்
நம்மை கண்மணி போல்
கரம் பிடித்து
தினம் நடத்தினாரே
- 2
தோளினிலே
சுமந்தனரே - (2)
கன்மலை
தேவனை துதித்திடுவோம்
- (2) - போற்றி
5. ஆவியில்
என்றும் களித்திடவே
அற்புதமாய்
நம்மை மீட்டனரே
- 2
ஆனந்தமாய்
துதித்திடுவோம்
- (2)
ஆண்டவர்
இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
- (2) - போற்றி
Comments
Post a Comment