மகிமையின் தேவனை பணிந்திடுவோம்
மகிமையின்
தேவனை பணிந்திடுவோம்
மகிழ்வுடன்
நிதமே துதித்தே
கனிவுடன்
பணிவுடன்
வணங்கி
நாமே ஆர்ப்பரிப்போம்
1. வாசல்களில்
நல் துதியுடனே
புகழ்ந்து
பாடி வணங்கிடுவோம்
- 2
மகிபனை
வல்லவரே
மகிழ்ந்து
நாமே துதித்திடுவோம்
- 2 - மகிமையின்
2. நன்றியுடன்
உம் சந்நிதியில்
நன்மை யாவும்
உணர்ந்திடுவோம்
- 2
உத்தமமாய்
உண்மையுடன்
என்றென்றும்
நாமே துதித்திடுவோம்
- 2 - மகிமையின்
3. செடிதனையாம்
நம் இயேசுவிலே
நிலைத்திருந்து
வளர்ந்திடுவோம்
- 2
நற்கனியால்
நிறைந்துமே
இரட்சகரை
நாம் உயர்த்திடுவோம்
- 2 - மகிமையின்
4. வானவரை
நம் தேவனையே
நாவில்
துதித்து மகிழ்ந்திடுவோம்
- 2
என்றுமவர்
மாறாதவர்
துதிகள்
சாற்றி ஆர்ப்பரிப்போம்
- 2 - மகிமையின்
5. மகிமையுடன்
நம் இயேசுதாமே
வானில்
இறங்கி வந்திடுவார்
- 2
விழிப்புடன்
ஜீவியத்துமே
ஆனந்தமாய்
நாம் ஆர்ப்பரிப்போம்
- 2 - மகிமையின்
Comments
Post a Comment