பொங்கி புகழ்ந்து துதிப்பேன் துதிப்பேன்

பொங்கி புகழ்ந்து துதிப்பேன் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பொங்கி புகழ்ந்து துதிப்பேன் துதிப்பேன்

                   பணிந்து தொழுது போற்றுவேன் போற்றுவேன்

                        இயேசுவின் மார்பில் மகிழுவேன் மகிழுவேன்

                        உச்சித அன்பை பாடுவேன் பாடுவேன்

 

1.         எத்தனை அன்பு ஏழையென் மீது

            எத்தனை தயவு தூசி வாழ்வினிலே

            தந்தையைப் போல தோளினில் சுமந்தீர்

            நேசித்தீர் போஷித்தீர் பாடுவேன் உமையே

 

2.         காணாமல் போன ஆட்டினைப் போல

            தூரமாய் விலகி பின் வாங்கிப் போனேன்

            மேய்ப்பனைப் போல தேடியே வந்தீர்

            தூக்கியே எடுத்து மந்தையில் சேர்த்தீர்

 

3.         கண்ணீரின் வாழ்வில் மனம் நொந்த போது

            கண்ணீரை துடைத்து தேறுதல் தந்தீர்

            தாயினைப் போல ஆற்றியே தேற்றினீர்

            அளவற்ற அன்பினை பாடுவேன் என்றுமே

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே