போய் சுதந்தரிப்போம் நாம்

போய் சுதந்தரிப்போம் நாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          போய் சுதந்தரிப்போம் - நாம் - (2)

                   கர்த்தர் வாக்கு பண்ணின தேசம்

                        போய் சுதந்தரிப்போம் - 2 - போய்

 

1.         கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு

            திசைகள் எங்கும் சுற்றிடுவோம் - 2

            நன்மை செய்த இயேசு போல

            நானிலம் எங்கும் சென்றிடுவோம் - 2 - போய்

 

2.         சேனைகளின் கர்த்தர் தேவன்

            நம்மோடென்றும் இருக்கின்றார் - 2

            சேதம் ஏதும் அணுகிடாமல்

            தேசம் அடைய செய்திடுவார் - 2 - போய்

 

3.         என்னை கேளும் ஜாதிகளை

            சுதந்திரமாய் தருவேன் என்றார் - 2

            பூமியின் எல்லைகளையும்

            சொந்தமாக கொடுத்திடுவார் - 2 - போய்

 

4.         கால்கள் வைக்கும் தேசத்தையே

            சுதந்திரமாய் தருவேன் என்றார் - 2

            ஆயத்தமாம் பாதரட்சை

            அணிந்தே இன்றே புறப்படுவோம் - 2 - போய்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே