போதும் நீர் போதும்
போதும்
நீர் போதும்
எந்தன்
வாழ்வில் நீரே
போதும்
1. நீர் எந்தன்
மேய்ப்பராய் இருப்பதே
போதும்
நான் உந்தன்
ஆடாய் வாழ்வதே
போதும்
என் பெலவீனத்தில்
உம் பெலன் போதும்
உந்தன்
கிருபை எனக்குப்
போதும்
2. ஏழுமடங்கு
நெருப்பு நடுவிலும்
இயேசு எம்மோடு அங்கு
நடந்திடுவீரே
சிங்கத்தின்
கெபியில் தள்ளப்பட்டாலும்
சீயோனின்
நாதன் உடனிருப்பீரே
3. கர்த்தர்
நீர் பெரியவர்
என்றறிவேனே
யுத்தத்தில்
வல்லோராய்
விளங்குகின்றீரே
உன்னதரே
உம்மால் செய்யக்கூடாத
அதிசயமான
காரியம் உண்டோ
Comments
Post a Comment