14 August 2025

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ

போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ

                        பாராளும் இயேசு உண்டு பதறாதே மனமே

 

1.         அலைகடல் நடுவினிலே

            அமிழ்ந்து போகின்றாயோ - 2

            கரம் நீட்டும் இயேசுவைப் பார்

            கரை சேர்க்கும் துணை அவரே - 2

 

                        ஆ... ஆனந்தம் பேரானந்தம்

                        என் அருள்நாதர் சமூகத்திலே - 2  - போராடும்

 

2.         கடந்ததை நினைத்து தினம்

            கண்ணீர் வடிக்கின்றாயோ - 2

            நடந்ததெல்லாம் நன்மைக்கே

            நன்றி நன்றி சொல்லு - 2 - ஆ... ஆனந்தம்

 

3.         வருங்கால பயங்களெல்லாம்

            வாட்டுதோ அனுதினமும் - 2

            அருள்நாதர் இயேசுவிடம்

            அனைத்தையும் கொடுத்துவிடு - 2 - ஆ... ஆனந்தம்

 

4.         நண்பன் கைவிட்டானோ

            நம்பினோர் எதிர்த்தனரோ - 2

            கைவிடா நம் தேவனின்

            கரம் பற்றி நடந்திடு - 2 - ஆ... ஆனந்தம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...