பொழியும் பொழியும் தயை பொழிந்திடும்
287.
இராகம்: தோடி ஆதிதாளம்
பல்லவி
பொழியும்,
பொழியும்; தயை
பொழிந்திடும்
அனுபல்லவி
எழிலடி
தந்து தாசரிவர்க்
கிரங்கிப்
- பொழி
சரணங்கள்
1. சத்தியம்
விடாமல் அதில்
தங்கி நிற்கவே,
நித்தமும்
உமைத் துதித்து
நேசிக்கவே - பொழி
2. தங்கள்
விசாரணையின் சபை
யாவின்மேல்
கங்குல்[1] பகலதாகக் கவலை
கொள்ள - பொழி
3. பாவச்
சிந்தை முதலாய்ப்
பரிச்சேதமே[2]
மேவி உறாமல்
உம்மேல் விருப்பம்
வைக்க - பொழி
4. உந்தன்
திருமறையை
உலகெங்குமே
எந்தக்
குலத்தோருக்கும்
எடுத்துரைக்க
- பொழி
- ஈசாக்கு
ஞானமுத்து
Comments
Post a Comment