பேரின்ப வீட்டில் பேரின்ப பாடல்
பேரின்ப
வீட்டில் பேரின்ப
பாடல்
பாடி
மகிழ்ந்திடுவோம்
1. சந்திர
சூரியன் போல் அழகும்
பிரகாசமாயிருப்போம்
கொடிகள்
பறக்கும் கெடியுள்ளவளாய்
அருணோதயம்
போல ஆ... ஆதி
ஒளி வீசுவோம்
2. ஜீவ நதியில்
ஆடி பாடி ஜீவகிரீடம்
சூடி
அம்மினதாபின்
இரதம் போலவே
ஆத்துமாவில்
மகிழ்வோம்
ஆ... அல்லேலூயா
பாடுவோம்
3. சித்திர
தையலாடை அணிந்து
நித்திய
ராஜ்ஜியத்தில்
பொன்னகர்
வீதியில் கிண்ணரத்தோடு
எந்நேரம்
பாடிடுவோம்
ஆ... இயேசுவுக்குள்
மகிழ்வோம்
4. விலை சொல்ல
முடியாது அந்நாடு
வெள்ளி
பொன் விரும்பாது
இயேசுவின்
ரத்தம் எல்லோருக்குள்ளும்
இலவசமாய்
அளிக்கும்
ஆ... இயேசுவுக்குள்
ஜொலிக்கும்
5. நீல நிறவானில்
விண்மீன் போல்
நீதியாய்
ஜொலித்திடுவோம்
ஆதி அனாதி தேவனோடென்றும்
ஆனந்தம்
பாடிடுவோம்
ஆ... அல்லேலூயா
பாடுவோம்
6. ஆசனம் இயேசுவுடன்
ஜெயம் பெற்ற
அன்பர்க்கு
போட்டிருக்கும்
ஒன்றாக
கூடி ஓசன்னா பாடி
அன்பரை
போற்றிடுவோம்
ஆ... அல்லேலூயா
பாடுவோம்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment