போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா

போவாஸ் போவாஸ் போர்வையால் என்னை மூடுமையா

                   போவாஸ் போவாஸ்

                        போர்வையால் என்னை மூடுமையா

                        இயேசையா இயேசையா உம்

                        அன்பினால் என்னை மூடுமையா

1.         உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்

            காப்பாற்றும் கடமை உமக்கையா - 2 - போவாஸ்

2.         நிறைவான பரிசு நீர்தானையா - உம்

            நிழல்தானே தங்கும் சொர்க்கமையா - 2 - போவாஸ்

3.         வேதனையோ வேறு சோதனையோ

            எதுவுமே என்னை பிரிக்காதையா - 2 - போவாஸ்

4.         ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்

            வேறொரு வயல் நான் போவதில்லை - 2 - போவாஸ்

5.         கற்றுத்தாரும் நான் கடைப்பிடிப்பேன்

            சொல்வதை செய்து முடித்திடுவேன் - 2 - போவாஸ்

6.         போர்வை விரித்தேன் போடுமையா

            கோதுமையால் என்னை நிரப்புமையா - 2 - போவாஸ்

7.         கருணைக்கண் கொண்டு நோக்குமையா - உந்தன்

            கனிமொழியால் என்னைத் தேற்றுமையா - 2 - போவாஸ்

8.         திருப்தியாக்கும் என் திருஉணவே

            தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே - 2 - போவாஸ்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே