14 August 2025

போதுமானவரே புதுமையானவரே

போதுமானவரே புதுமையானவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே

            என் பாவம் தீர்த்தவரே - 2

                        ஆராதனை ஆராதனை ஆயுளெல்லாம் ஆராதனை - (2)

 

1.         எனக்காக தண்டிக்கப்பட்டீரே

            அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் - 2

            எனக்காக காயப்பட்டீரே

            அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் - 2 - ஆராதனை

 

2.         பாவங்கள் சுமந்ததனால் - நான்

            நீதிமானாய் மாற்றப்பட்டேன் - 2

            மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய

            ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா - 2 - ஆராதனை

 

3.         எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்

            அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் - 2

            எனக்காக அவமானமடைந்து - உம்

            மகிமையிலே பங்குபெறச் செய்தீர் - 2 - ஆராதனை

 

4.         சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை

            செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர் - 2

            சாபங்களை சுமந்து கொண்டதால் - நான்

            ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன் - 2 - ஆராதனை

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...