பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பேசு சபையே பேசு பேசு சபையே பேசு - 2

 

            இது உலர்ந்த எலும்புகள்

            உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்

            இது தள்ளாடும் முழங்கால்கள்

            புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்

                        இது கோணல்கள் யாவும்

                        நேராக மாறிடும் நாட்கள்

                        இது கரடான பாதைகள்

                        செவ்வையாக மாறிடும் நாட்கள் - 2 - பேசு சபையே

 

1.         நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்

            தசைகளும் புதிதாகத் தோன்றும்

            ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்

            புதுஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் - 2 - பேசு சபையே

 

2.         மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே

            பெருமழை தேசத்தில் பெய்யும்

            கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு

            கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் - அதனால் - 2 - பேசு சபையே

 

3.         ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் வியந்திடவும்

            கர்த்தரின் கிரியைகள் தோன்றும்

            மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனையொன்று

            கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் - 2 - இது உலர்ந்த

 

                        ஜீவனை பேசு, இரட்சிப்பை பேசு

                        சுவாசத்தை பேசு, அற்புதத்தை பேசு - 3

 

                        சபையே நீ எழும்பிடு, காற்றே நீ வீசிடு - (2)

                        போற்று சபையே போற்று (இயேசுவை) - 4 - பேசு சபையே

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே