மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
மகளே
சீயோன் மகிழ்ச்சியாலே
ஆர்ப்பரி
இஸ்ராயேலே
ஆரவாரம் செய்திடு
- 2
முழு உள்ளத்தோடு
அகமகிழ்ந்து களிகூறு
கெம்பீரித்து
பாடி பாடி மகிழ்ந்திரு
- 2
அகமகிழ்ந்து
களிகூறு ஆரவாரம்
செய்திடு - (2)
1. தள்ளிவிட்டார்
உன் தண்டனையை
அகற்றி
விட்டார் உன் பகைவர்களை
வந்து விட்டார்
அவர் உன் நடுவில்
இனி நீ
தீங்கை காணமாட்டாய்
- அகமகிழ்ந்து
2. உன் பொருட்டு
அவர் மகிழ்கின்றார்
உன்னை குறித்து
அவர் பாடுகின்றார்
அனுதினமும்
அவர் அன்பினாலே
புது உயிர்
உனக்குத் தருகின்றார்
- அகமகிழ்ந்து
3. தளரவிடாதே
உன் கைகளை
பயப்படாதே
நீ அஞ்சாதே
இனி நீ
இழிவு அடைய மாட்டாய்
உனது துன்பம்
நீக்கி விட்டார்
- அகமகிழ்ந்து
4. உலகமெங்கும்
பெயர் புகழ் பெறச்
செய்வேன்
அவமானம்
நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட
உன்னை சேர்த்துக்
கொள்வேன்
ஊனமுற்ற
உன்னை காப்பாற்றுவேன்
- அகமகிழ்ந்து
- பெர்க்மான்ஸ்
YouTube Link
Comments
Post a Comment